Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தை திருமணம் நடத்தினால்…. இப்படி தான் பண்ணனும்…. கலெக்டரின் கடும் எச்சரிக்கை….!!

குழந்தை திருமணத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 18 வயது பூர்த்தியாகாத பெண்ணிற்கும், 21 வயது பூர்த்தியாகாத ஆணிற்கும் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த குழந்தை திருமணத்தால் இளம் வயதில் கருத்தரித்தல், ரத்தசோகை, எடை குறைவாக குழந்தை பிறத்தல், கருச்சிதைவு, மனவளர்ச்சி குன்றிய குழந்தை பெறுதல், தாய் மற்றும் சேய் மரணம் ஆகிய அபாயங்கள் ஏற்படுகின்றது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் கூறியபோது, இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அவர்களின் கல்வியை தொடர பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என்றும் திருமணத்தை நடத்துபவர்கள், நடத்துவதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மற்றும் திருமணத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து பெண் குழந்தையை திருமணம் செய்யும் 18 வயது நிரம்பிய ஆணுக்கு 2 வருடம் சிறை தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது 2 சேர்த்து விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் குழந்தை திருமணத்தை நடத்தி வைத்தவர்களுக்கும் 2 வருடம் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். எனவே களப்பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் சைல்டுலைன் அழைப்பு எண் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அணுகி தகவல்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |