Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்” நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கணும்…. விழாவில் பேசிய கலெக்டர்….!!

200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் உள்ள டி.வி.என்.திருமண மண்டபத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழா கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

மேலும் விழாவில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. போன்றோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து விழாவில் கலந்து கொண்ட 200 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு, பழம் போன்ற சீர்வரிசை தாம்பூலங்களை கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினார்கள்.

அதன்பின் விழாவில் கலெக்டர் கார்மேகம் பேசியபோது “கர்ப்பிணிகள் மனதை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்” என்று கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செந்தில்குமார் உட்பட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து இறுதியில் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

Categories

Tech |