Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தை வளர்ப்புக்கு ஏற்ற குறிப்புகள்….!!!! பின்பற்றி பாருங்கள்……!!!

* குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.

* வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.

* சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும் போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.

* வீட்டில் சின்னக் குழந்தைகள் இருந்தால் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன்மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.

* டிராமா, சினிமா போன்ற நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரங்களில் சிறிய குழந்தைகளுடன் செல்லும்போது டிபன் பாக்ஸில் உணவை எடுத்துச்சென்று குழந்தைகளுக்குக் கொடுத்துவிடலாம். இதனால் குழந்தைகள் சாப்பிடாமல் உறங்கி விடுவதைத் தவிர்க்க முடியும்.

* உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், “கால்சியம்’ சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.

* “குழந்தை வளர்ப்பான்’ ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.

* பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.

* கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.

* குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.

* குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவதுபோல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

* குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.

* குழந்தை அழும்போது காதுப் பக்கம் கையைக் கொண்டுபோய் வைத்துக்கொண்டால் அது காது வலியினால் இருக்கலாம்.

* குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனியுங்கள். பேசாமல் விட்டுவிட்டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

Categories

Tech |