Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தையின் அழகிய குளியல்… செய்யக்கூடியவை..செய்யக்கூடாதவை..!!

குழந்தைகளுக்கு செய்யக்கூடாதவை:

குழந்தைக்கு பால் கொடுத்த உடனேயே குளிக்க வைக்கக்கூடாது.

காது, மூக்கு கண்களில் எண்ணெய் போன்றவற்றை ஊற்றக்கூடாது.

காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் ஊதக்கூடாது.

தொண்டையிலிருந்து கையை உள்ளேவிட்டு சளியை எடுக்கக்கூடாது.

தலையில் எண்ணெய் தடவி, கடலை மாவு, பயத்த மாவு போன்றவற்றை தேய்த்துக் குளிக்க வைக்கக்கூடாது.

சாம்பிராணி போடக்கூடாது.

பவுடர் போடக்கூடாது.

கண்களில் மை தடவக்கூடாது.

புருவத்தில் மை தடவக்கூடாது

நெற்றியில் விபூதி, குங்குமம் வைப்பதைக்கூட தவிர்ப்பது நல்லது.

குழந்தையை குளிக்க வைக்கும்பொழுது செய்யக்கூடியவை:

குழந்தையின் ஆடையை முதலில் கழற்ற கூடாது. குழந்தைக்கு தண்ணீர் அறை வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். ஏஸி அறையாக இருந்தால், அதை சூடு நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இதமான சூட்டில் ஒரு பெரிய பேஸினில் வெந்நீர் எடுத்து கொள்ளுங்கள்.

மென்மையான 2 துண்டுகள், கண்களைத் துடைக்க பஞ்சு உருண்டைகள் அல்லது மென்மையான சிறு துணிகள், குழந்தைக்கு வேண்டிய உடைகள், குளியலுக்குப் பிறகு போர்த்திவிட தலைக்குல்லாயுடன் கூடிய டவல். நன்கு ஒரு மென்மையான டவலால் போர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

வைத்திருக்கும் வெந்நீரை உன்னுடைய மணிக்கட்டில் அல்லது உள்ளங்கைப் பகுதியில் ஊற்றிப் பார்க்கவும். லேசான சூடுதான் இருக்க வேண்டும். பஞ்சு உருண்டைகளை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து கண்களின் இமைகளை துடைத்துவிடவேண்டும்.

மூக்குப் பகுதியில் ஆரம்பித்து காதை நோக்கி சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு தனி பஞ்சு உருண்டை அல்லது மெல்லிய பருத்தித் துணி உபயோகிக்க வேண்டும்.

ஒரு மெல்லிய துணியை வெந்நீரில் நனைத்து, முதலில் மூக்கைச் சுற்றியுள்ள பகுதியை மென்மையாக, லேசான அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.

காதின் வெளிப் பகுதியை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். காதின் உட்பகுதியில் எதுவும் செய்யக்கூடாது. பிறகு இரு கன்னங்கள், வாய்ப்பகுதி, தாடை, கழுத்து ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

இப்போது, குழந்தையின் சட்டையை அவிழ்த்துவிட்டு நெஞ்சு, வயிறு ஆகியவற்றை, வெந்நீரில் நனைத்து பிழிந்த வேறொரு சுத்தமான துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.

தொப்புள் காயவில்லையென்றால், மிகவும் கவனமாக அந்தப் பகுதியை ஈரம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி ஈரம் பட்டுவிட்டால், உடனடியாக நன்கு உலர்ந்த துணியால் துடைத்துவிட வேண்டும்.

தொப்புள் அருகிலிருந்து துடைக்க ஆரம்பித்து வெளிப்புறமாகத் தொடர வேண்டும். பிறகு, கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். கைகளின் அக்குள் மற்றும் கைகளின் மடிப்புகளை கவனமாகச் சுத்தம் செய்ய வேண்டும். அங்கு கிருமித் தொற்றும் பூசணத் தொற்றும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்

Categories

Tech |