Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் …. மாவட்ட ஆட்சியர் வழங்கினார் ….!!!

குழந்தைகளுக்கு  ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பை மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கி தொடங்கி வைத்தார் .

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தை பருவ பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள்  அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 964 குழந்தைகளில் மயிலாடுதுறை,  குத்தாலம் ,சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 558 குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து  உணவுகள் அடங்கிய தொகுப்பு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பினை குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் மற்றும் குழந்தை பருவ பாதுகாப்பு இயக்கத்தின் தொண்டு நிறுவன மாநில ஒருங்கிணைப்பாளராக தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |