குழந்தைகளுக்கான இருதயநல சிகிச்சை முகாம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜேஷ் திலக் மருத்துவமனையில் வருகின்ற 26-ம் தேதி குழந்தைகளுக்கான இலவச இருதயநல சிகிச்சை முகாம் நடைபெற இருக்கின்றது. இதுகுறித்து டாக்டர் நெவில் சாலமன் செய்தியாளர்களை சந்தித்து கூறியபோது ராஜேஷ் திலக் மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆப் சென்ட்ரல் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் குழந்தைகள் இருதய சிகிச்சை முகாம் வருகின்ற 26-ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
இதில் குழந்தைகளுக்கு மூச்சு திணறல், குறைவாக உணவு உண்ணுதல், அதிகமாக வியர்த்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், மேனி நீல நிறம் மாறுதல் மற்றும் பெரியவர்களுக்கான இருதய பிரச்சினைகளுக்கு மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளலாம். இதனையடுத்து முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் இலவசம் என்று நெவில் சாலமன் தெரிவித்துள்ளார். அப்போது மருத்துவமனை சேர்மன் ராஜேஷ் திலக், அப்போலோ மருத்துவமனை மருத்துவர் முத்துக்குமரன் மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் அவருடன் இருந்தனர்.