Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த நெய் அப்பம்..!!

குழந்தைகளும் மிகவும் பிடிக்கும். இந்த விடுமுறையில் செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
 

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு             –  2 கப்,
தயிர்                                    –  1, 1/2 கப்,
நெய்                                    – பொரிப்பதற்கு,
சர்க்கரை                         –  1 கப்,
ஏலக்காய் பொடி         – 3  சிட்டிகை,
உப்பு                                   –  1, 1/2 சிட்டிகை,
தேங்காய்ப்பால்           – 1 கப்.

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, தயிர், சர்க்கரை பொடியாக்கி கொண்டது, ஏலக்காய் பொடி, உப்பு இவை அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதோடு நாம் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு எடுத்து கொள்ளவும்.

தேவைப்பட்டால் சிறிது அளவு தண்ணீர் கோடா நீங்கள் ஊற்றி கொள்ளலாம். பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும், குழி கரண்டியால் நாம் கரைத்து எடுத்து வைத்திருக்கும் மாவை அரை கரண்டி அளவு எடுத்து எண்ணெயில் ஊற்றி பொரித்தெடுத்து அதை எண்ணெய் இல்லாமல் வடிகட்டி மிதமான சூட்டில் சாப்பிட வேண்டும். இப்போ சுவையான நெய் அப்பம் ரெடி..!

 

Categories

Tech |