Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிச்சை எடுத்தால் சிறை….. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் முக்கிய இடங்களில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடம் இருந்து குழந்தைகளை மீட்டு கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரை மாநகர் பகுதிகளில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோரிப்பாளையம், காளவாசல் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பான புகார்கள் அதிக அளவில் குழந்தைகள் நல அமைப்பினருக்கு வந்த நிலையில் மாநகர காவல்துறையின் விபச்சாரம் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். முதற்கட்டமாக மதுரை இரயில் நிலைய வாயில் மற்றும் காளவாசல் பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நிலையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து கொண்டிருந்த நபர்கள் மற்றும் குழந்தைகளை மீட்டுள்ளனர். தற்போது வரை 6 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாநகரம் முழுவதும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |