குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐநாவின் சர்வதேச உடன்படிக்கையின் படி 18 வயதிற்குட்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகளே. குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் உணவு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி அவற்றை உறுதிப்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமைகள் ஆகும். நமது குழந்தைகளுக்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இயற்கையில் வழங்கப்பட வேண்டியது ஒன்று. குழந்தைகளுக்கு கல்வி உரிமை அவர்களே வாழ்வுரிமை ஆகும். குழந்தைகளுக்கு உயிர் வாழ்வதற்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, முன்னேற்றத்திற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமை என 4 வகை அளவில் உரிமைகளும் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குழந்தைகளுக்கு சட்டபூர்வ உரிமைகளை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்குவதற்காக இந்த சட்டம், கல்வி சார்ந்த சட்டங்களை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவற்றை நடைமுறைப்படுத்தலும், பின்பற்றதலும் இன்றியமையாதாகும். 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் எட்டாம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாய கல்வி பெற வேண்டும். உடல் அளவிலும் மனதளவிலும் தண்டனை பெறாமல் இருத்தல் வேண்டும்.
நலிவற்ற மற்றும் பாதுகாப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளை சார்ந்த குழந்தைகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் நுழைவுநிலை வகுப்பில் சேர்க்க வேண்டும். பள்ளி வளாகத்தில் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும். அரசால் வழங்கப்படும் விலையில்லா பாட புத்தகம், சீருடைகள், கல்வி தொழில் நுட்ப சாதனங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்களை பெறுதல். மேலும் மாற்றுத்திற கொண்ட குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்ந்து கல்வி பெறுதல். தேவைப்படின் அந்த பள்ளியில் இருந்து உடனடியாக மாற்று சான்றிதழ் பெறலாம். எழுத்து தேர்வோ நேர்முகத் தேர்வோ இன்றி பள்ளியில் சேரலாம். வயதிற்கான எந்தவித சான்றிதழ் இன்றி பள்ளியில் சேரலாம்.
மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம்.
இந்த சட்டம் மாற்றுத்திறனாளிகள் உரிமையும் நலமும், சம உரிமை, வேலை வாய்ப்பு ஆகியவற்றை முதன்மை கூறுகளை கொண்டு உள்ளது. இந்தியாவில் மட்டும் ஏழு கோடிக்கு அதிகமாகவை மாற்றித்திறனாளிகள் உள்ளனர். மாற்றித்திறனாளிகளின் தேவையே கருணை அடிப்படையில் பார்க்க கூடாது என்றும் உரிமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்றும் அவர்களுக்கு எதிரான பாரபட்சங்கள் களையப்பட வேண்டும் ஆகியவை ஐக்கிய நாடு சபையின் உடன்படிக்கையாகும்.
போக்சா சட்டம் 2012.
18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளையும் பாலின வித்தியாசம் இன்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்கு கொண்டுவரப்பட்ட சட்டம் இது. இந்த சட்ட 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடர வைப்பது, பாலியல் சீண்டல்கள் செய்வது, பாலியல் ரீதியாக செய்கை செய்வது, தொலைபேசி அழைப்பு, அலைபேசியில் மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, ஆபாச படங்கள் எடுப்பது, விற்ப்பது, தயாரிப்பது மற்றவருக்கு கொடுப்பது, இணையதளம், கணினி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் அவை அனைத்துமே குற்றம் ஆகும். போக்சா சட்டம் இந்நிகழ்வுகளுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கும் வகை செய்கிறது. இதனையடுத்த குழந்தைகள் உரிமைகளை பெறுதல் பள்ளி மேலாண்மை குழுவும் ஒரு பங்கை வகித்து வருகிறது. அதாவது, குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுகளை பெறுதல், குழந்தைகளின் உரிமை வளர்ச்சி பற்றி பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்துதல். குழந்தைகளுக்கான உரிமை வழங்கப்படுகின்றனவா? என்பதை கண்காணித்தல் மற்றும் உறுதி செய்தல் ஆகியவற்றை பள்ளி மேலாண்மை குழு மேற்கொள்கிறது.