நமது முன்னோர்களின் பண்பாடான, பாரம்பரியமிக்க சத்து மாவு தயார் செய்வது எப்படி.? என்பதை பார்ப்போம்.
இவ்வாறு செய்து கொடுக்கும் மாவு தான் உண்மையிலேயே குழந்தைகளுக்கு முழுமையான ஆரோக்கியத்தை அளிக்கும்.
தேவையான பொருட்கள்:
ராகி – 2 1/2கிலோ
சோளம் – 2,1/2 கிலோ
நாட்டு கம்பு – 2,1/4 கிலோ
பாசிப்பயறு – 1 கிலோ
கொள்ளு – 1 கிலோ
மக்காசோளம் – 2,1/4 கிலோ
பொட்டுக்கடலை – 1 கிலோ
சோயா – 1 கிலோ
தினை – 1 கிலோ
கருப்பு உளுந்து – அரை கிலோ
சம்பா கோதுமை – அரை கிலோ
பார்லி – அரை கிலோ
நிலக்கடலை – அரை கிலோ
சம்பா அவல் – அரை கிலோ
ஜவ்வரிசி – அரை கிலோ
வெள்ளை எள் – 100 கிராம்
கசகசா – 50 கிராம்
ஏலம் – 50 கிராம்
முந்திரி – 50 கிராம்
சாரப்பருப்பு – 50 கிராம்
பாதாம் – 50 கிராம்
ஓமம் – 50 கிராம்
சுக்கு – 50 கிராம்
பிஸ்தா – 50 கிராம்
ஜாதிக்காய் – 2
மாசிக்காய் – 2
செய்முறை:
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள். அதில் உள்ள தண்ணீரை நன்கு வடித்த பிறகு அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளுங்கள். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளுங்கள். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைக்க வேண்டும்.
சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும். சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் அனைத்தும் மளிகைக் கடைகளிலேயே கிடைக்கிறது. இவைகளை காயவைப்பதற்கு வீட்டு மாடிலேயே வைக்கலாம்.
சத்து மாவின் பயன்கள்:
1. ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்கவும்.
2. ஒரு நபர் வீதம் 2 டீஸ்பூன் மாவு அளவு தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வையுங்கள். மாவு கூழ் தயார்.
3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு, உப்பு, மிளகுபொடி என சேர்த்து பருகி கொள்ளலாம்.
4.எதுவும் கலக்காமல் அப்படியே கூடநீங்கள் குடிக்கலாம்.
5. காலையில் 2 டம்ளர் சத்துமாவு கூழ் குடித்தீர்கள் என்றால் காலை உணவு பூர்த்தியாகி விடும்.
6. இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
7. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் குண்டாகாது.
8. உடல் எடை குறைவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
9. குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற ஒரு உணவாக இருக்கும்.
10. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.
11. முதியோர்கள் இதை அருந்தும் பொழுது அவர்களுக்கு உடனடி சக்தி கிடைப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
12. எளிதில் ஜீரணிக்க கூடியதாகும்.