கோயம்புத்தூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் கவனிப்பு சிறப்பு பிரிவு சுகாதாரத்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் வல்லுநர் குழு புதிய மருத்துவ கல்லூரிகள் குறித்து ஆய்வு நடத்திய பிறகு மருத்துவ படிப்புக்கான கூடுதல் இடங்களை கேட்டுப் பெற வேண்டும் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை விழாக்காலம் வருவதால் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் 2 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்ததும் முதல் மாநிலமாக தமிழகத்தில் அதற்கான பணிகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.