Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைக்கு ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் !!!! இதோ இருக்கிறதே சத்து நிறைந்த கருப்பட்டி கேரட் பால் ….

தினமும் ஒரு கேரட் ஆவது குழந்தைகளுக்கு கொடுங்க .காய்கறிகளில் சத்து நிறைந்த ஒன்று கேரட் ….

தேவையான பொருட்கள் :

துருவிய கேரட் :1கப்

கருப்பட்டி :3டீஸ்பூன்

இஞ்சிச்சாறு :அரை டீஸ்பூன்

ஏலக்காய் தூள் :சிறிது

பால் :250மி .லி

செய்முறை :

*பாலை நன்றாக கொதிக்க வைத்து ஆற விடவும்.

*துருவிய கேரட்டை  நன்கு அரைத்து கொள்ளவும் .அரைத்த கேரட்டை வடிகொட்டி கொள்ளவும் .

*வடிகட்டிய ஜூசில் கருப்பட்டி ,இஞ்சிச்சாறு ,ஏலக்காய் தூள் ,காய்ச்சி ஆறவைத்த பால் இவைகளை கண்ணாடி டம்ளரில் எடுத்து பரிமாறவும் .

*சத்து நிறைந்த சுவையான ருசி மிக்க கருப்பட்டி கேரட் பால் தயார் ……

Categories

Tech |