Categories
உலக செய்திகள்

தகாத உறவினால் ஏற்பட்ட வீபரிதம்…. குழந்தையை கொன்ற கொடூரத் தாய்…. சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்….!!

குழந்தையை கொன்ற வழக்கில் தாய்க்கும் அவரது காதலருக்கும் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள bramingham பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான நிக்கோலா ப்ரீஸ்ட் அவரின் 3 வயது குழந்தையான கெய்லி-ஜெய்டேயுடன்  தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு கால்லம் ரெட்ஃபெர்ன் என்ற 22 வயதான வாலிபருடன் தொடர்பு இருந்துள்ளது. இதனை அடுத்து கால்லம் நிக்கோலா வீட்டிற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சென்றுள்ளார். அங்கு அவரும் நிக்கோலாவும் நெருங்கிய உறவில் இருந்துள்ளனர். அப்பொழுது நிக்கோலாவின் குழந்தை தெரியாமல் அறைக்குள் நுழைந்து விட்டாள். இதனால் இருவரும் தங்களின் உறவுக்கு இடையூறாக இருந்த கெய்லியை அடித்துள்ளனர்.

இதனால் கெய்லியின் வயிற்றிலும் நெஞ்சிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குப் பின் நிக்கோலா தனது டிக்டாக் பக்கத்தில் “நான் மிகப் பெரிய தவறு ஒன்றை செய்து விட்டேன். அப்படி நான் செய்திருக்கக் கூடாது. அதற்கு பதிலாக நான் வேறு எதையாவது செய்ய முயற்சித்திருக்க வேண்டும்” என்று மறைமுகமாக அவரது தாயிடம் மன்னிப்பு கேட்பது போல ஒரு காணொலியை வெளியிட்டுயிருந்தார். இதனை அறிந்த போலீசார் நிக்கோலா மற்றும் அவரின் காதலனான கால்லமையும் கைது செய்தனர்.

மேலும் இந்த  விசாரணையின் போது ஒருவருக்கொருவர் மாறி மாறி பழிசுமத்திக் கொண்டனர். ஆனால் இறுதியில் இருவரும் சேர்ந்துதான் குழந்தையை கொலை செய்துள்ளனர் என்பது உறுதியானது. இந்த நிலையில் ஒரு வருட காலமாக  நடந்து கொண்டிருந்த வழக்கில் கடந்த வியாழக்கிழமை அன்று நிக்கோலா மற்றும் அவரின் காதலன் மீதும் குற்றம் நிருபிக்கப்பட்டது. இதனை அடுத்து நிக்கோலாவிற்கு 15 ஆண்டுகளும், கால்லமிற்கு 14 ஆண்டுகளும் சிறை தண்டனை அளித்து Bramingham Crown Court தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |