ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை விசாலாட்சி நகரில் ஜோனத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குழந்தையின் தலை சில்வர் பாத்திரத்திற்குள் சிக்கிக் கொண்டது. இதனை எடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு அழுத குழந்தையை பார்த்த அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் மாட்டிய பாத்திரத்தை வெட்டினர். பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பெற்றோர் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.