ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா தொற்றால் அதிக பாதிப்பு அபாயங்களை கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி மிகவும் அத்தியாவசியமானது ஆகும். இந்த குழந்தைகள் முன்னுரிமை அடிப்படையில் மாத இறுதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு பைசர் நிறுவனத்தின் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியின் குறைக்கப்பட்ட டோஸ் போடுவதற்கு ஐரோப்பிய யூனியன் கடந்த மாதம் அனுமதி வழங்கியது. கொரோனா தொற்றால் பெல்ஜியத்தில் 27,900 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒமிக்ரான் வகை தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாடு அதிகரித்துள்ளது.