Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தையின் சுவாசக்குழாயில் சிக்கிய நிலக்கடலை… அதிநவீன கருவி மூலம் அகற்றிய மருத்துவர்கள்…!!

குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த நிலக்கடலையை மருத்துவர்கள் அதிநவீன கருவி மூலம் அகற்றினர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்- பழனியம்மாள்.இத்தம்பதியருக்கு 2 வயதில் பிரதீப் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது பிரதீப் கையில் கிடைத்த நிலக்கடலையை வாயில் போட்டு விழுங்கியிருக்கின்றான். அப்போது நிலக்கடலை குழந்தையின் மூச்சுக் குழாயில் அடைத்துள்ளது. இதையடுத்து மூச்சுவிட சிரமப்பட்டு குழந்தை அழுவதைக் கண்ட பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் சுவாச குழாயில் அடைப்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் சேலம் மருத்துவ கல்லூரியில் காது மூக்கு தொண்டை பிரிவு தலைமை மருத்துவர் கிருத்திகா தனது மருத்துவ குழுவினருடன் அதிநவீன டெலிப்ராங்கோஸ்கோபி கருவி மூலம் குழந்தையின் மூச்சு குழாயில் அடைத்திருந்த  நிலக்கடலையை அகற்றினார்.மேலும் செய்தியாளர்களிடம் பேசிய துறைத்தலைவர் கிருஷ்ண சுந்தரி, டெலிப்ராங்கோஸ்கோபி கருவி மூலம் குழந்தைகள் சுவாசக்குழாயில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற முடியும் என்றும் சேலம் அரசு மருத்துவமனையில் 20 லட்சம் மதிப்புள்ள டெலிப்ராங்கோஸ்கோபி கருவி பயன்பாட்டில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |