Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட கைக்குழந்தை… சாலையை சீர் செய்த பொதுமக்கள்… கைக்கோர்த்த மனிதநேயம்…!!

ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கைகோர்த்து வழிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய  வேண்டும் என்பதால் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட வேண்டியிருந்தது. இதற்காக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் வெள்ளகோயில் வழியாக குழந்தை கோவை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம்  எடுத்துச் செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் செல்வதற்காக காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பொதுமக்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்,நகராட்சி ஊழியர்கள், ஆட்டோ கார் ஓட்டுநர்கள் , சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும்  சாலையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தஞ்சாவூரிலிருந்து அட்டவணை போட பட்டு  எத்தனை மணிக்கு எந்த பகுதியை ஆம்புலன்ஸ் கடந்து செல்ல முடியும் என்று வழிவகுத்து அதன் படி ஆம்புலன்ஸில் கடந்து சென்றனர். மேலும் குழந்தையை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸுக்கு  உதவியாக ஒவ்வொரு  பகுதியிலிருந்தும் ஒரு ஆம்புலன்ஸ் உதவிக்கு சிறிது தூரம் பயணித்தது . இக்காட்சி காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இக்காட்சியை  பார்க்கும் போது சினிமாவில் பார்ப்பதை போன்று இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கைக் குழந்தையை காப்பாற்ற மக்கள் அனைவரும் கைக்கோர்த்த சம்பவம் இன்றும் மனித நேயம் மக்களிடையே இருக்கிறது என்பதற்கு மிகச் சிறந்த சான்றாக  விளங்குகிறது.

Categories

Tech |