Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.. சுவையான “கேரட் தேங்காய் பர்ஃபி”..!! :

வீட்டில் குழந்தைகளுக்கு இவ்வாறு சுவைமிகுந்த தேங்காய் பர்ஃபி  செய்து கொடுங்கள்..!

தேவையான பொருட்கள்:

கேரட் துருவல்                             -அரை கப்
சர்க்கரை                                         – ஒரு கப்
நெய்                                                    –  தேவையான அளவு
ஏலக்காய் பொடி                       – 1/2சிட்டிகை                 –
தேங்காய்த் துருவல்               -அரை கப்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து அதில்  தேங்காய்த் துருவல் மற்றும் கேரட் துருவளுடன், சர்க்கரையும் சேர்த்து  மிதமான  சூட்டில் கிளறிவிடவும். இவை அனைத்தையும் கிளறும் போதுஇடைஇடையே நெய் சேர்த்து கிளறவும். அதன் பிறகு சர்க்கரையே  கிளறி  விடும்போது தானே இளகி வரும் பொழுது   கேரட் துருவல் வெந்து,நெய் தனியாக பிரிந்து வரும் பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி , நெய் தடவிய தட்டில் போட்டு ஆரிய பின் சிறு சிறு துண்டுகளாக கட் பன்னி எடுத்து கொள்ளவும். இப்பொழுது ருசிமிகுந்த  கேரட் தேங்காய் பர்ஃபி ரெடி…!

 

 

Categories

Tech |