Categories
உலக செய்திகள்

‘நீண்ட நேரமாக சிக்கியிருந்த நாய்’…. பத்திரமாக மீட்டெடுத்த போலீசார்…. இணையத்தில் வைரலாகும் காணொளி காட்சி….!!

குளத்தில் சிக்கியிருந்த நாயை இரு போலீசார் மீட்கும் காணொளி காட்சியானது இணையத்தில் பரவி வருகிறது.

ஸ்பெயின் நாட்டின் வடக்கு பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அங்குள்ள குளங்கள் பனிக்கட்டிகளால் உறைந்த நிலையில் உள்ளன. இந்த நிலையில் கான்ஃபிரான்க்  நகராட்சியில் உள்ள பனிக்கட்டிகள் உறைந்த குளத்தில் நீண்ட நேரமாக ஒரு நாய் சிக்கியுள்ளது.

இது குறித்த தகவலானது போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த இரு போலீசார் உறைந்துபோன குளத்தில் சிக்கியிருந்த நாயை பத்திரமாக மீட்டுள்ளனர். குறிப்பாக இது தொடர்பான காணொளி காட்சியானது இணையத்தில் பரவி வருகிறது.

Categories

Tech |