Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குளத்தில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு…. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அரிய வாய்ப்பு…. கலெக்டரின் செயல்….!!

குளங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக மீன் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக பிற துறைகளுடன் இணைந்து கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என கலெக்டர் கூறியுள்ளார். அதில் ஒரு பாகமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில் குளத்தில் மீன் குஞ்சுகளை கலெக்டர் விட்டுள்ளார். இதில் இந்திலி ஊராட்சியை சார்ந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மீன் ரகங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

பின்னர் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் 2021 கீழாக ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான குளங்களில் ஒரு ஹெக்டர் பரப்பளவில் 5 ஆயிரம் மீன்குஞ்சுகள் என 10 ஏக்கர் பரப்பளவில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட இருக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் இருக்கும் 40 ஊராட்சிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக மீன் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் முதற்கட்டமாக முருகன் கோவில் குளத்தில் மீன் குஞ்சுகள் தண்ணீரில் விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மீன் குஞ்சுகளை வளர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். அதற்கு பிறகு மீன்வளத் துறையின் மூலமாக பயனாளிகளுக்கு மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |