குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள மில்லர்புரத்தை சேர்ந்தவர் அன்புராஜ் .இவர் நேற்று மதியம் அங்குள்ள குளத்தில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அன்புராஜ் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளார் . அவர் நீண்ட நேரமாகியும் தண்ணீரை விட்டு வெளியே வராததால் பதறிய அவரது நண்பர்கள் அன்புராஜை குளத்தில் தேடி பார்த்துள்ளனர் .
நீண்ட நேர தேடுதலுக்கு பிறகும் அவர்களால் அன்புராஜை கண்டுபிடிக்க முடியவில்லை.இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது .தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த அன்புராஜின் உடலை மீட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.