குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி. நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் குமார் தற்போது சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு வந்திருந்தார். இந்நிலையில் அரியகுளம் பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு தினேஷ்குமார் குளிக்க சென்றுள்ளார்.
இதனையடுத்து தினேஷ்குமார் குளித்து கொண்டிருந்த இடத்தில் ஆழம் அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தினேஷ்குமார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.