குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சில்வர்புரம் பகுதியில் மாடன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வாலிபரின் உடலை மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் தருவைகுளம் பகுதியில் வசிக்கும் கோவில்ராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.