Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இது எப்படி வந்துச்சு… வியப்பில் மக்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2 சாமி சிலைகளை வருவாய் துறையினர் கைப்பற்றினர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் உள்ள குளத்தில் இரண்டு சாமி சிலைகள் கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அழியாநிலை பகுதியில் வசிக்கும் ஒருவர் கடந்த வருடம் அரசமரத்தடி பிள்ளையார் கோவிலில் இருந்த கல்லாலான நாகர் சிலை, சிமெண்டால் செய்யப்பட்ட அம்பாள் சிலையை அகற்றி வத்திரம் குளத்தில் போட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்த குளத்தில் தண்ணீர் வற்றி விட்டதால் சிலைகள் தென்பட்டுள்ளது. மேலும் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் இந்த இரண்டு சிலைகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

Categories

Tech |