Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்”… குளத்தில் தவறி விழுந்து… சோகத்தில் குடும்பம்..!!

குளக்கரை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஆவடி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் 10 வயதுடைய யுவராஜ். யுவராஜ் அங்குள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வீட்டின் அருகே உள்ள குளக்கரை ஓரமாக தனது நண்பர்களுடன் யுவராஜ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன்  எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்தான். இதை எடுத்து அவனது நண்பர்கள் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளனர் .

ஆனால் அவர்கள்  சம்பவ இடத்திற்கு வருவதற்குள் யுவராஜ் தண்ணீரில் மூழ்கி உள்ளான்.பிறகு வந்த  பொதுமக்கள் யுவராஜை குளத்துக்குள் இறங்கி தேடியபோது அவன் சடலமாகவே மீட்கப்பட்டான். இதுகுறித்து  தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |