குளத்தில் சடலமாக கிடந்த பெண் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் இருவருக்கும் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜு தனது மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் கனிமொழி மன விருத்தியில் திடீரென காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் காவல்துறையினரும் கனிமொழியை தேடி வந்தனர். பின்னர் வீட்டின் அருகில் இருக்கும் குளத்தில் கனிமொழி சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனிமொழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் கனிமொழி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.