டீக்கடை தொழிலாளி குளத்தில் உள்ள படிகட்டில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் அகதீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அகதீஸ்வரன் குளிப்பதற்காக கருப்பர் கோவில் குளத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து குளத்தின் படிகட்டில் குளிப்பதற்காக அகதீஸ்வரன் இறங்கியுள்ளார். அப்போது படிக்கட்டில் படர்ந்திருந்த பாசியில் அகதீஸ்வரன் கால் வைத்ததால் வழுக்கி கீழே விழுந்துள்ளார்.
இதனால் தலையில் பலத்த காயமடைந்த அகதீஸ்வரனை அருகில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவர்கள் அகதீஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கறம்பக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.