மோட்டாரில் குளிக்க சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வாசல் கிராமத்தில் வளர்மதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டாரில் குளிக்க சென்ற போது திடீரென வலிப்பு ஏற்பட்டு வாய்க்கால் தண்ணீரில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வளர்மதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.