Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி…. குளத்தில் இருந்த அதிர்ச்சி…. கடலூரில் பரபரப்பு….!!

குளத்தில் குளிக்க சென்ற தொழிலாளியை முதலை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள பனங்காடு கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் அருகாமையில் இருக்கும் குட்டையில் வேல்முருகனின் தம்பியான ராஜீவ்காந்தி இரவு நேரத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் தண்ணீருக்குள் இறங்கிய போது அங்கு முதலை வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து குளத்திலிருந்து வெளியே வர முயற்சி செய்த போது முதலை ராஜீவ்காந்தியைப் பிடித்து கடித்துக் குதறி உள்ளது.

இதில் பலத்த காயம் ஏற்பட்ட ராஜீவ்காந்தி முதலையிடமிருந்து தப்பி ஊருக்குள்  வந்துள்ளார். பின்னர் இது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ராஜீவ்காந்திக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் குட்டைக்கு சென்று முதலையை பிடித்துள்ளனர். பிறகு இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த முதலையை மீட்டு பாதுகாப்பான வக்காரமாரி நீர்தேக்கத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.

Categories

Tech |