Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சுற்றுப்பயணம்… கிணற்றில் காத்திருந்த மரணம்… மகனை இழந்து பரிதவிக்கும் குடும்பம்…!!!

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞன்  நீரில் மூழ்கி இறந்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாஸ் என்பவர் நெல்லை பாளையங்கோட்டை நயினார் தெருவில் வசித்து வருகிறார். அவருக்கு 23 வயதுடைய பீர் ஷேக் அரபாத் எனும் மகன் இருந்தார். அரபாத் அச்சகத்தின் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இவர்  நண்பர்களுடன் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ வைகுண்டத்தின் அருகே இலுப்பை குளத்திற்கு வந்தார். அங்கு அவர்கள் வெட்டிகுளம் ரோட்டின் அருகில் இருந்த கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். பீர் ஷேக் அரபாத் நீச்சல் தெரியாமல் கிணற்றில் குதித்து குளித்துள்ளார். நீச்சல் தெரியாமல் கிணற்றில் குதித்த அரபாத் கிணற்றில் மூழ்கினான்.

இதனைக் கண்ட அவரது நண்பர்கள் மிகவும் பதட்டத்துடன் அவனை நீருக்குள் தேடினார்கள். ஆனால் அவன் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சேரகுளம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் மற்றும் சில போலீசார் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பீர் ஷேக் அரபாத்தை  சடலமாக கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தனர்.

இதனை கண்ட அவனது நண்பர்கள் மிகவும் கவலையுடன் கண்ணீர் விட்டு அழுது கதறினர். இதனையடுத்து போலீசார் அரபாக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சேரகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |