குளிர்காலத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் பாதிப்பு ஏற்படும் எஎன்பதால் அதிகம் தண்ணீர் குடுக்க வேண்டும்.
பெரும்பாலான மக்கள் தண்ணீர் பருகுவது ஏன் அலட்சியம் காட்டுகின்றனர். தண்ணீர் அதிகம் குடிக்க வில்லை என்றால் உடல் நலம் பாதிக்கப்படும். குறிப்பாக வெயில் காலங்களில் அதிகம் தண்ணீர் கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் மக்கள் அதனை சரியாக செய்வதில்லை. வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் தேவையான அளவு தண்ணீர் பருகுவது இல்லை. தாகம் எடுக்காவிட்டாலும் உங்கள் உதட்டில் வறட்சி ஏற்பட்டால் போதுமான நீர் அருந்த இல்லை என்பதாகும்.
உடல் எடையை சீராக பராமரிக்க நீர்ச்சத்து தக்க வைப்பது மிகவும் அவசியம். குளிர் காலத்தில் போதுமான அளவு நீர் பருகுவது கொழுப்பை கட்டுப்படுத்த உதவும். நீர் பருக விருப்பமில்லாதவர்கள் மூலிகை டீ பருகலாம். ஆனால் எதையும் குடிக்காமல் இருப்பது உடலுக்கு கெடுதல் தரும். அதனால் குளிர் காலத்திலும் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.