தேனியில் ஊரடங்கு விதியை மீறி இயங்கிவந்த குளிர்பான ஆலைக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஊரடங்கு விதியை மீறி தனியார் தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் திறக்கப்படுகிறது என்று அரசு அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அப்புகாரின் பேரில் ஆண்டிப்பட்டியினுடைய தாசில்தாரான சந்திரசேகரன் மற்றும் சில முக்கிய அரசு அதிகாரிகளின் தலைமையிலான குழுவினர்கள் அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தினர்.
அப்போது 9 ஆவது வார்டிலிருக்கும் நாடார் தெருவில் தனியாருக்கு சொந்தமான குளிர்பான ஆலை ஊரடங்கு விதியை மீறி இயங்கியது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அரசு அதிகாரிகள் குளிர்பான ஆலையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் ஆலையின் உரிமையாளரின் மீது ஆண்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.