கூலி தொழிலாளி ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேலூர்பேட்டை கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான இவர் வீட்டின் அருகாமையில் இருக்கும் ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது ராமச்சந்திரன் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.
இதனைக் கண்ட கிராம மக்கள் அவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பின்னர் நீண்ட நேரம் போராடிய பிறகு ராமச்சந்திரனை கிராம மக்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.