ஏரியில் குளித்துக் கொண்டிருந்த மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணாடிகுப்பம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விண்ணமங்கலம் பகுதியின் அருகில் இருக்கும் ஏரியில் சரண் தனது நண்பர்களுடன் குடித்து கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவனை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அவனை காப்பற்ற முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சரணை மீட்டுள்ளனர். ஆனால் அதற்குள் சரண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.