குளியலறையிலும் கூட மக்களை சந்தித்துள்ள முதல், முதல்-மந்திரி சரண்ஜித் சிங் தான் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் சட்டசபை தேர்தலானது நடைபெறவுள்ளது. டெல்லியில் ஆட்சிய அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியை பிடிப்பதற்கு முயன்று வருகிறது. இதன் காரணமாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி பஞ்சாப் சென்று வருகிறார். இந்நிலையில் அவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் மாநில ஒவ்வொரு பெண்களுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் கொடுக்கப்படும் என்ற சுவாரசியமான திட்டத்தை அறிவித்தார்.
இதனால் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திடுக்கிட்டு நின்றது. இந்நிலையில் பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியபோது “உலக வரலாற்றிலேயே குளியலறையிலும் கூட மக்களை சந்தித்த முதல், முதல்-மந்திரி சரண்ஜித் சிங் தான் என்று கூறினார். மேலும் குளியலறை நேரம் உட்பட 24 மணி நேரமும் மக்களை சந்திப்பதாக சரண்ஜித் சிங் பேட்டி அளிப்பதை நான் பார்த்தேன்” என்று கூறினார்.