கணினி குலுக்கல் முறையில் மூன்று நபர்களை தேர்வு செய்து பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மூன்றாம் பரிசாக கிரைண்டர், இரண்டாம் பரிசாக மிக்சி, முதல் பரிசாக கலர் டிவியும் கூடுதலாக மூன்று நபர்களுக்கு டிபன் கேரியர்களையும் வருவாய் அலுவலர் தங்கபாண்டியன் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் மாதனூர் ஒன்றியத்தை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் கஸ்தூரி என்பவருக்கு இரண்டாம் பரிசும் மற்றும் ஜெகதீஷ் குப்தா என்பவருக்கு மூன்றாம் பரிசும் வழங்கப் பட்டிருக்கிறது.