Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! மரியாதை கூடும்….! கோபத்தை குறைக்க வேண்டும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.

இன்று அனைவரையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயத்தை பெருக்கி கொள்ளலாம். நட்பு வட்டம் பெருகும். பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப சுமை கூடிவிடும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு எடுத்துக் கொள்ள வேண்டும். விரயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீண் செலவை குறைத்துக் கொள்ள வேண்டும். சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளிடம் தேவையில்லாமல் பேச்சை வளர்க்க வேண்டாம். தடைபட்டிருந்த பணவரவு ஓரளவு வந்து சேரும். கடனாக கொடுத்த பணமும் மீண்டும் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. வாகனம் மூலம் செலவுகள் உண்டாகும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். உறவினர் வருகை இருப்பதினால் மனதில் அதிக கவலை தோன்றும்.

காதல் திருப்திகரமாக இருக்கும். காதல் கண்டிப்பாக கைகூடும். நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். மாணவர்களுக்கு செயல்களில் வெற்றி இருக்கும். விளையாட்டு துறையில் சாதிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். ஓய்வாக இருக்க நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் சொல்வதை கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |