கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று முதலவர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில அரசியல் உச்சகட்ட குழப்பத்தில் இருந்து வருகின்றது. அங்கு ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த MLA_க்கள் 16 பேர் கூண்டோடு ராஜினாமா செய்து , பாஜக கட்டுப்பாட்டில் இருந்து வருவதால் முதல்வர் குமாரசாமியின் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று அதிரடியாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து சபாநாயகரை சந்தித்த பாஜக தலைவர் எடியூரப்பா, முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை உடனே நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் , சபாநாயகரை சந்தித்த கே.ஆர். ரமேஷை சந்தித்த ஜேடிஎஸ்-காங்கிரஸ் தலைவர்கள் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்காமல் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
இதை தொடர்ந்து நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று பாஜக வலியுறுத்தியது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் வருகின்ற 18_ஆம் தேதி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கர்நாடக அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.