Categories
சினிமா தமிழ் சினிமா

“குமரி TO ஜோத்பூர்”….. விமானத்தில் அனுப்பப்பட்ட சினேரியஸ் கழுகு….. நெகிழ்ச்சி பின்னணி இதோ…..!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே ஆசாரி பள்ளம் பகுதியில் இருந்து சினேரியஸ் கழுகை வனத்துறையினர் மீட்டனர். இந்த கழுகு ஒக்கி புயலால் சிக்கி அப்பகுதிக்கு வந்துள்ளது. இந்த கழுகை கடந்த 2017-ம் ஆண்டு வனத்துறையினர் மீட்டு கூண்டில் வைத்து பராமரித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்த பறவைக்கு ஒக்கி என பெயரிடப்பட்டு உதயகிரி பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கழுகு வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதை மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு திருப்பி அனுப்புவதற்கு வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாச்சியா உயிரியல் பூங்காவில் கழுகை  ஒப்படைக்க திட்டமிடப்பட்டது. மேலும் விமான நிலையத்தின் சிறப்பு அனுமதியோடு கழுகை விமானத்தில் ஏற்றி டெல்லிக்கு அனுப்பி அங்கிருந்து ஜோத்பூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |