கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வருமானம் வரும் வழியை கண்டு கொள்வீர்கள். உங்கள் ஆலோசனைகளை கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவார்கள். உத்யோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மையை கொடுக்கும்.
மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது சிறப்பு. எதிர்ப்புக்கள் குறையும், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறப்பு, கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப சிறப்பு. இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் ரொம்ப பொறுமையாக செல்லுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவிலிருக்கும், அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்