கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகளை மனதில் நிறுத்தி செய்வீர்கள். நண்பரின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். வீடு வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு இருக்கும். எதிர்பாராத செலவு கொஞ்சம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும், பிள்ளைகளின் செயல்பாடுகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
ஆயுதங்களை பயன்படுத்தும் போது ரொம்ப கவனமாக செயல்படுங்கள்,யாரிடமும் இன்று பண தேவைக்காக கடன் மட்டும் வாங்க வேண்டாம் பார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டும் இல்லாமல் கணவன் மனைவிக்கு இடையே எதிர்பாராத வகையில் வாக்குவாதங்கள் வரக்கூடும். கூடுமானவரை வாக்குவாதங்கள் வந்தால் தயவு செய்து நீங்கள் ஒதுங்கிச் சென்று விடுவது ரொம்ப நல்லது இதை மட்டும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது பச்சை நிறம் ஆடை அணிந்து செல்லுங்கள் அது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷத்தை நீக்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை.