கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் திறமை கூடும் நாளாக இருக்கும். நண்பர்கள் உங்களை புகழ்ந்து பேசுவார்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வழியை உருவாக்குவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் மட்டும் கொஞ்சம் அலைச்சல்கள், ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை கூட ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். ஓரளவு சீராக இருக்கும் கவலை வேண்டாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் இருக்கும். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். இன்று கொஞ்சம் மனதில் ஏதேனும் ஒன்றை பற்றி பயம் இருந்து கொண்டே இருக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வெளியூர் பயணத்தின் போது பொருட்கள் மீது கவனமாக இருங்கள். இன்ற சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. குடும்பத்தாருடன் கலகலப்பாக பேசி மகிழ்வீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று லட்சமி வழிபாட்டையும் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் நீங்கள் வாழலாம்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை :மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை