கும்பம் ராசி அன்பர்கள்,
இன்று குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி இருக்கும் உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் . நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் நடந்துகொள்வார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும், கனவு நனவாகும் நாளாக இருக்கும். ஆன்மீக நாட்டம் செல்லும். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்குவீர்கள்.
வழக்குகள் சாதகமான பலனையே கொடுக்கும். புத்திரர்கள் இடம் மிகவும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். இன்று கொஞ்சம் கடினமாகத்தான் உழைப்பீர்கள். இன்று எதிரிகளிடம் இருந்து விடுபடும் நாளாகவும் இருக்கும். இன்று மாணவக் கண்மணிகள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் காவி நிறம்