கும்ப ராசி அன்பர்களே..!! இன்று மற்றவர்களுடன் மட்டும் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருங்கள். வாக்குவாதத்தை தவிர்த்தால் இன்றைய நாள் சிறப்பாகவே இருக்கும் எல்லோரிடமும் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நட்பால் நன்மை கிட்டினாலும் அவர்கள் பற்றிய குறைகள் எதுவும் சொல்ல வேண்டாம். நாகரீக பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். செய் தொழிலில் லாபத்தை ஈட்டுவீர்கள். வரன்கள் வீடு தேடி வரக்கூடும். உத்தியோகம் முயற்சி வெற்றியை கொடுக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது சிரமம்தான். இன்று சிலரது எதிர்பாராத பேச்சு உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கும்.
அதனால் யாரிடம் பேசினாலும் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். தேவையற்ற விஷயங்களில் கோப பட நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. காதலில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு நன்மை நடந்தாலும் பேச்சில் கடுமை இல்லாமல் பேச வேண்டியது அவசியம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதோடு இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு உணவாக கொடுங்கள். உங்கள் வாழ்வில் இருக்கும் தோஷங்கள் விலகி நன்மை நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்