கும்பம் ராசி அன்பர்கள்…!! இன்று சிவபெருமானை வழிபட்டு சிறப்புகளைக் காண வேண்டிய நாளாக இருக்கும். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். இன்று பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவுக்கு வரக்கூடும். உங்களுடைய சாமர்த்தியமான செயல்களால் மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்களின் நட்பு கிடைக்கும், கௌரவம் இன்று கூடும். செய்தொழிலில் நல்ல லாபமும் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும்.
புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் பல மடங்கு லாபத்தை இன்று ஈட்டுவீர்கள் அதனால் நன்மையும் ஏற்படும். மஹான்களின் சந்திப்பு கிடைக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். தன் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் இல்லம் தேடி வரும். இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாக இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்த ஒரு சிரமமும் இல்லை, சிரமமின்றி பாடங்களை சிறப்பாக படிப்பார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியம் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மட்டும் இல்ல நீலநிறம்