கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று மற்றவரின் அணுகுமுறை உங்களுக்கு உதவும் விதமாகவே இருக்கும். எளிமையாக அனைவரிடமும் நடந்துகொள்வீர்கள். விலகிய உறவினர்கள் சொந்தம் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அக்கறையுடன் பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றியும் பெறுவீர்கள். கௌரவம் அந்தஸ்து உயரும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகளும் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாகவே இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு பொன்னான நாளாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு கூடும். எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றி இருக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணம் உங்களுக்கு திருப்திகரமான பயணமாகவே அமையும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியம் சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்