கும்பம் ராசி அன்பர்களே,
இன்று விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்ப பெரியவரின் ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். தொழில் மாற்றும் சிந்தனை உருவாகும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும் பிரச்சனைகளில் சுமூகமான முடிவு ஏற்படும். தைரியம் கூடும், திறமையை மூலதனமாக வைத்து வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள்.
வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய திறமையின் மூலம் அனைவரையும் கவர்வீர்கள். அவசரத்தை மட்டும் தவிர்ப்பது ரொம்ப நல்லது. கடமைகளை காப்பாற்றுவீர்கள், அதனால் சில சமயம் விரக்தி கூட ஏற்படலாம். தொழில் வியாபாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. மாணவ செல்வங்களுக்கு கல்வியில் நல்ல வெற்றி இருக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்