கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டு கும்பமேளாவின் கால அளவு வெறும் ஒரு மாதமாக குறைக்கப்பட்டு பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடந்து வருகின்றது.
கும்பமேளா இந்து சமயத்தினரால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு ஊர்களிலுள்ள ஆற்றுப்படுகையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உத்தரகாண்டின் ஹரித்வாரில் கும்பமேளா இந்த ஆண்டு நடந்து வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளாவின் கால அளவு வெறும் ஒரு மாதமாக குறைக்கப்பட்டது. அதிலும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
கும்பமேளாவின் மிக முக்கிய நாளான சோமாவதி அம்மாவாசை, மேஷ் சங்கராந்தி ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சாமியார்கள், சாதுக்கள், பக்தர்கள் என 48 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் அச்சமின்றி புனித நீராடி உள்ளனர். அந்தக் கட்டுக்கடங்காத கூட்டத்தில் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய பாதுகாப்பு படையினராலும் முடியவில்லை. இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில் கொரோனாவின் பலத்த கட்டுப்பாடு விதிமுறைகளும் உடைக்கப்பட்டன.
இதன் விளைவாக அங்கு கொரோனா தொற்று அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் 1,701 பேருக்கு தொட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அதிகப்படியான பக்தர்கள் ஒன்றிணையும் நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளா உள்ளது. கொரோனாவின் 2-வது அலை அதிக அளவில்பரவிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நடைபெறும் இந்த நிகழ்வால் தொற்று அதிகரிக்கும் என அனைவரிடமும் அச்சம் இருந்து வருகின்றது. நாடு முழுவதும் ஒன்றாக சங்கமிக்கும் இந்த கும்பமேளாவில் கொரோனா தொற்று பரவ அதிக அளவில் வாய்ப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.