கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று குறைகள் அகலும் நாளாக இருக்கும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். குழப்பங்கள் அகல நண்பர்கள் யோசனை வழங்குவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். பயணங்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். இன்று பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். வெளியூர் வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிக்க தாமதம் ஏற்படும்.
புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். எதை பற்றியும் கவலை வேண்டாம். மனக்குழப்பம் அடையாதீர்கள். பொறுமையை கடைபிடியுங்கள். நிதானத்தை மேற்கொள்ளுங்கள். காரியங்கள் உங்களுக்கு அனைத்துமே கைகூடும். அதுமட்டுமில்லாமல் இன்று காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். உழைத்து பாடங்களைப் படியுங்கள். விளையாட்டை தயவு செய்து ஏறக்கட்டிவிடுவது சிறப்பு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்