கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கு முன் ஏற்பாடுகளை செய்வீர்கள். தொழில் முறையில் உள்ள அனுகூலங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். எப்பொழுதுமே ரகசியத்தை உங்களுடைய மனதில் வைத்துக் கொள்வது நல்லது. கூடுதல் வருமானத்தால் தேவைகள் அனைத்தும் நிறைவேற கூடும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டிய நிலைமை இருக்கும். கொடுத்த கடனை வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் தலையிடாமல் கவனமாக பேசுவது நல்லது. தாய்மாமனிடம் கருத்து வேறுபாடு மோதல்கள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது ரொம்ப நல்லது. கூடுமானவரை யாரிடமும் எந்த வாக்குவாதமும் செய்யாமல் இருங்கள். ஆலயம் சென்று வாருங்கள் மனம் நிம்மதியாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய வேலைகள் ரொம்ப சிறப்பாகவே அமையும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு ரொம்ப சிறப்பை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் சூரிய பகவானின் வழிபாட்டை மேற்கொண்டு
காரியங்களில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியங்களும் ரொம்ப சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் அடர் நீல நிறம்